பேராதனை பல்கலைக்கழகத்தில் IYSSE விரிவுரை இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான பதில்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் சர்வதேச இளைஞர் மற்றும் சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் (IYSSE) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விரிவுரை இரத்துச் செய்யப்பட்டதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அலுவலகம் முற்றாக மறுக்கிறது. கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கல்வி சுதந்திரம் மற்றும் ஜனநாயக ஈடுபாடு, கல்வி நிறுவனங்களில் விமர்சன ரீதியான கலந்துரையாடல்களை வளர்ப்பதற்கு அடிப்படையான பெறுமானங்களுக்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதரவாகவே இருந்து வந்துள்ளார்.

இந்த விரிவுரையை இரத்துச் செய்யும் பல்கலைக்கழகத்தின் தீர்மானத்தில் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் செல்வாக்கு செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றதும் தவறாக வழிநடத்தக்கூடியதுமாகும். இந்த நிகழ்வு தொடர்பில் இந்த அலுவலகத்திலிருந்து எந்தவொரு உத்தரவோ அல்லது அறிவுறுத்தலோ வெளியிடப்படவில்லை. கல்வி நிறுவனங்களின் சுயாட்சி என்பது இந்த அரசாங்கம் நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ள கொள்கையாகும். பல்கலைக்கழகங்கள் அரசாங்கக் கொள்கைகள் மீதான விமர்சனங்கள் உட்பட பலதரப்பட்ட கருத்துக்களை, ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல் சுதந்திரமாக வெளிப்படுத்தவும் கலந்துரையாடவும் கூடிய இடமாக இருக்க வேண்டும்.

இருந்தபோதிலும், கல்வி வெளிகளுக்குள் ஜனநாயக வெளிப்பாட்டையும், திறந்த உரையாடலையும் அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கை குறித்தும் நாம் கவலை தெரிவிக்கிறோம். கலாநிதி அமரசூரிய அவர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அர்த்தமுள்ள மற்றும் விமர்சன ரீதியான உரையாடல்களில் ஈடுபடுவதற்கான உரிமைகளைப் பாதுகாப்பதில் தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பரந்தளவில் பொதுமக்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பேணுவதற்கு இந்தக் கோட்பாடுகளை நிலைநிறுத்துவது இன்றியமையாததாகும்.

எஸ்.விஜிதா பஸ்நாயக்க.
ஊடக செயலாளர்,
பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் அலுவலகம்.

Download Release